பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஈதுல் அள்ஹா பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் (தமது உரையில்), “நாம் இன்றைய தினம் செய்யும் முதல் வேலை யாதெனில், (பெருநாள் தொழுகை) தொழுவதுதான்.5 பின்னர் திரும்பி வந்து ‘குர்பானி’ பிராணிகளை அறுப்போம். இவ்வாறு யார் செய்கிறாரோ அவரே நமது வழியைப் பின்பற்றியவர் ஆவார். யார் (பெருநாள் தொழுகை) தொழுவதற்கு முன்பே (பிராணியை) அறுக்கிறாரோ அவர் தம் குடும்பத்தாருக்காக அவசரப்பட்டு (முன்கூட்டியே அறுத்து)விட்ட இறைச்சியாகவே அது அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் அறவே சேராது” என்று கூறினார்கள். அப்போது என் தாய்மாமன் அபூபுர்தா பின் நியார் (ரலி) அவர்கள் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் தொழுவதற்கு முன்பே (குர்பானி பிராணியை) அறுத்துவிட்டேன். (ஆனால்) என்னிடம் ஒரு வயதுடைய வெள்ளாடு ஒன்று உள்ளது; அது ஒரு வயது பூர்த்தியான ஆட்டைவிடச் சிறந்தது (அதை நான் அறுக்கலாமா?)” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “‘முத-ல் அறுத்ததற்குப் பதிலாக ‘இதை வைத்துக்கொள்வீராக’ அல்லது ‘இதை அறுத்துவிடுவீராக’. ஆனால், உங்களுக் குப் பிறகு வேறெவருக்கும் ஒரு வயதுடைய வெள்ளாட்டுக்குட்டி ஒரு போதும் போதுமாகாது” என்று பதிலளித் தார்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “வேறு நாட்களில் செய்யும் நற்செயல், இந்த (துல்ஹஜ் முதல்) பத்து நாட்களில் செய்யும் நற்செயலைவிடச் சிறந்ததல்ல” என்று கூறினார்கள். அப்போது மக்கள், “அறப்போரை விடவுமா?” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், “அறப்போரை விடவும்தான்; ஆயினும், தமது உயிரையும் பொருளை யும் அர்ப்பணிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்று எதையும் திரும்பக் கொண்டு வராத மனிதரைத் தவிர” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
முஹம்மத் பின் அபீபக்ர் அஸ் ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மினாவி-ருந்து அரஃபா நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது நான் அனஸ் (ரலி) அவர்களிடம் ‘தல்பியா’ சொல்வது குறித்து, “நீங்கள் (மினாவி-ருந்து அரஃபா போகும்போது) நபி (ஸல்) அவர்களுடன் எவ்வாறு செயல்பட்டு வந்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “தல்பியா’ சொல்பவர் தல்பியா சொல்வார். அது (நபியவர்களால்) ஆட்சேபிக்கப்பட வில்லை; தக்பீர் சொல்பவர் தக்பீர் சொல்வார். அதுவும் (நபியவர்களால்) ஆட்சேபிக்கப்படவில்லை” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும் திரையினுள் இருக்கும் குமரிப் பெண்களையும் புறப் படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளை யிடப்பட்டிருந்தோம். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களைக்கூடப் புறப்படச் செய்ய வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டோம். பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) ஆண்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு ஆண்கள் தக்பீர் சொல்லும்போது அவர்களும் தக்பீர் சொல்வார்கள்; ஆண்கள் பிரார்த்திக்கும்போது அவர்களும் பிரார்த்திப்பார்கள். அந்த நாளின் அருள் வளத்தையும் (பாவத்) தூய்மையையும் எதிர்பார்ப்பார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 972 — Sahih al Bukhari 13:21
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ تُرْكَزُ الْحَرْبَةُ قُدَّامَهُ يَوْمَ الْفِطْرِ وَالنَّحْرِ ثُمَّ يُصَلِّي.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (திறந்தவெளித் திட-ல் தொழுகை நடைபெறும்போது) நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் (தடுப்பாக) ஒரு ஈட்டி நட்டு வைக்கப்படும். பிறகு நபி (ஸல்) அவர்கள் (அதை நோக்கித்) தொழு வார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 973 — Sahih al Bukhari 13:22
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ حَدَّثَنَا أَبُو عَمْرٍو، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَغْدُو إِلَى الْمُصَلَّى، وَالْعَنَزَةُ بَيْنَ يَدَيْهِ، تُحْمَلُ وَتُنْصَبُ بِالْمُصَلَّى بَيْنَ يَدَيْهِ فَيُصَلِّي إِلَيْهَا.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்காகத்) தொழும் திடலுக்குப் புறப்பட்டுச் செல்வார்கள். அவர்களுக்கு முன்னால் (கைப்பிடி உள்ள) கைத்தடி எடுத்துச் செல்லப்பட்டுத் தொழும் திடலில் அவர்களுக்கு முன்னால் (தடுப்பாக) நட்டு வைக்கப்படும். அதை நோக்கி நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள். அத்தியாயம் :
உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: (பெருநாளில்) திரைக்குள்ளிருக்கும் கன்னிப் பெண்களை (தொழும் திடலுக்கு) புறப்படச் செய்யும்படி நாங்கள் கட்டளையிடப்பட்டோம். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், ‘அறிவிப்பாளர் அய்யூப் (ரஹ்) அவர்கள்’ அல்லது ‘ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள்’ “கன்னிப் பெண் களையும் திரைக்குள்ளிருக்கும் பெண் களையும் புறப்படச் செய்யும்படி நாங்கள் கட்டளையிடப்பட்டோம். ஆனால், மாத விடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கிருப்பார்கள்” என்று கூடுதலாக அறிவித்துள்ளார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 975 — Sahih al Bukhari 13:24
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبَّاسٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، قَالَ خَرَجْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ فِطْرٍ أَوْ أَضْحَى، فَصَلَّى ثُمَّ خَطَبَ، ثُمَّ أَتَى النِّسَاءَ فَوَعَظَهُنَّ وَذَكَّرَهُنَّ، وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (சிறுவனாக இருந்தபோது) ‘நோன்புப் பெருநாளிலோ’ அல்லது ‘ஹஜ்ஜுப் பெருநாளிலோ’ நபி (ஸல்) அவர்களுடன் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் சென்றேன். நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகை) தொழுதுவிட்டுப் பிறகு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு அறிவுரை கூறினார்கள்; (மறுமை குறித்து) அவர்களுக்கு நினைவூட்டிப் பேசினார்கள்; தர்மம் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அத்தியாயம் :
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஈதுல் அள்ஹா பெருநாள் அன்று ‘அல்பகீஉ’ எனும் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்று, இரண்டு ரக்அத்கள் (பெருநாள் தொழுகையைத்) தொழுவித்தார்கள். பிறகு எங்களை முன்னோக்கியபடி, “இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டிய வழிபாடு (யாதெனில்), முத-ல் நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம்; பிறகு திரும்பிச் சென்று (குர்பானி பிராணிகளை) அறுப்போம். எனவே, யார் இவ்வாறு செய்கிறாரோ அவரே நமது வழிமுறையைப் பின் பற்றியவர் ஆவார். (பெருநாள்) தொழுகைக்கு முன்பே யார் (குர்பானிப் பிராணியை) அறுக்கிறாரோ அவர் தம் குடும்பத்தாருக்காக (முன்கூட்டியே) அவசரமாகத் தயார் செய்த ஒரு பொருளாகவே அது அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது” என்று குறிப்பிட்டார்கள். அப்போது (அபூபுர்தா எனப்படும்) ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! (தொழுகைக்கு முன்பே குர்பானி பிராணியை) நான் அறுத்துவிட்டேன். என்னிடம் ஒரு வயது பூர்த்தியான ஆட்டைவிடச் சிறந்த ஒரு வயதுடைய (வெள்ளாட்டுக் குட்டி) ஒன்று உள்ளது (அதை நான் அறுக்கலாமா?)” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “(முத-ல் அறுத்ததற்குப் பதிலாக) இதை நீர் அறுத்துவிடுவீராக! உங்களுக்குப் பிறகு வேறவருக்கும் இது போதுமாகாது” என்று கூறினார்கள். அத்தியாயம் :
அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “பெருநாள் தொழுகையில் நபி (ஸல்) அவர் களுடன் நீங்களும் கலந்துகொண்டீர் களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “ஆம். (உறவின் காரணத்தினால்) அவர்களுடன் எனக்கு நெருக்கம் இல்லாதிருந்திருப்பின் சிறுவனாக இருந்த நான் அவர்களுடன் கலந்துகொண்டிருக்க முடியாது. நபி (ஸல்) அவர்கள் (புறப்பட்டு) கஸீர் பின் அஸ்ஸல்த் அவர்களின் வீட்டிற்கு அருகே அடையாளம் இருந்த இடத்திற்கு வந்து (பெருநாள் தொழுகை) தொழுவித்து விட்டு, உரை நிகழ்த்தினார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் தம்முட னிருக்க, பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கு அறிவுரை கூறினார்கள். அவர்களிடம் (மறுமையை) நினைவூட்டி னார்கள்; தர்மம் செய்யுமாறு அவர்களுக் குக் கட்டளையிட்டார்கள். அப்போது பெண்கள் தம் கைகளை நீட்டி பிலால் (ரலி) அவர்கள் (கையில் ஏந்தப்பட்டிருந்த) துணியில் அ(வர்களது தர்மத்)தை இட்டுக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். பிறகு நபி (ஸல்) அவர்களும் பிலால் (ரலி) அவர்களும் இல்லம் நோக்கி நடந்தனர். அத்தியாயம் :