Qurani·قرآني
தமிழ்

சாட்சிகள் (ஷஹாதா)

53 ஹதீஸ்கள் · #2637–2689

ஹதீஸ் 2637 — Sahih al Bukhari 52:1
حَدَّثَنَا حَجَّاجٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ النُّمَيْرِيُّ، حَدَّثَنَا يُونُسُ،‏.‏ وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، وَابْنُ الْمُسَيَّبِ، وَعَلْقَمَةُ بْنُ وَقَّاصٍ، وَعُبَيْدُ اللَّهِ، عَنْ حَدِيثِ، عَائِشَةَ ـ رضى الله عنها ـ وَبَعْضُ حَدِيثِهِمْ يُصَدِّقُ بَعْضًا، حِينَ قَالَ لَهَا أَهْلُ الإِفْكِ، فَدَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلِيًّا وَأُسَامَةَ حِينَ اسْتَلْبَثَ الْوَحْىُ يَسْتَأْمِرُهُمَا فِي فِرَاقِ أَهْلِهِ، فَأَمَّا أُسَامَةُ فَقَالَ أَهْلُكَ وَلاَ نَعْلَمُ إِلاَّ خَيْرًا‏.‏ وَقَالَتْ بَرِيرَةُ إِنْ رَأَيْتُ عَلَيْهَا أَمْرًا أَغْمِصُهُ أَكْثَرَ مِنْ أَنَّهَا جَارِيَةٌ حَدِيثَةُ السِّنِّ تَنَامُ عَنْ عَجِينِ أَهْلِهَا، فَتَأْتِي الدَّاجِنُ فَتَأْكُلُهُ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ يَعْذِرُنَا مِنْ رَجُلٍ بَلَغَنِي أَذَاهُ فِي أَهْلِ بَيْتِي فَوَاللَّهِ مَا عَلِمْتُ مِنْ أَهْلِي إِلاَّ خَيْرًا، وَلَقَدْ ذَكَرُوا رَجُلاً مَا عَلِمْتُ عَلَيْهِ إِلاَّ خَيْرًا ‏"‏‏.‏
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்), சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்), அல்கமா பின் வக்காஸ் (ரஹ்), உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோர் எனக்கு, ஆயிஷா (ரலி) அவர்களை (சிலர் அவதூறு பேசியது) பற்றிய ஹதீஸை அறிவித்தார்கள். ஒருவர் அறிவித்த ஹதீஸ் மற்றவர் அறிவித்த ஹதீஸை உறுதிப்படுத்துவதாக இருந்தது. அவதூறு சொன்னவர்கள் தாங்கள் பேசிய அவதூறுகளையெல்லாம் சொன்ன போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியாரை (ஆயிஷா வை)ப் பிரிந்துவிடுவது தொடர்பாக ஆலோசனை கலப்பதற்காக வேண்டி அலீ (ரலி) அவர்களையும் உசாமா (ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அப்போது வேத அறிவிப்பு (வஹீ) தாற்காலிகமாக நின்றுபோயிருந்தது. உசாமா (ரலி) அவர்கள், ‘‘அவர் (ஆயிஷா), தங்கள் துணைவியார். (அவரைப் பற்றி) நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை” என்று கூறினார்கள். மேலும், (ஆயிஷா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட) பரீரா (ரலி) அவர்கள், ‘‘அவர் (ஆயிஷா), தம் வீட்டாரின் குழைத்த மாவை வளர்ப்பு ஆடு வந்து தின்கின்ற அளவுக்கு (அப்படியே) விட்டுவிட்டு உறங்கிவிடுகின்ற இள வயதுச் சிறுமி என்பதற்கு அதிகமாகக் குறைசொல்வதற்கு அவரிடம் நான் எதையும் பார்க்கவில்லை” என்று கூறினார்கள். (அதன்பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘என் வீட்டாரின் விஷயத் தில் எனக்கு (மன) வேதனை அளித்துவிட்ட ஒரு மனிதனுக்கு (அப்துல்லாஹ் பின் உபை என்ற நயவஞ்சகனுக்கு) எதிராக எனக்கு உதவி புரிபவர் யார்? அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவியிடம் நல்லதைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை. மேலும், எந்த மனிதரைக் குறித்து நன்மையைத் தவிர வேறெதையும் நான் அறியமாட்டேனோ அவரை (இணைத்து) அவர்கள் (அவதூறு) கூறியுள்ளனர்” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2638 — Sahih al Bukhari 52:2
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ سَالِمٌ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ انْطَلَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأُبَىُّ بْنُ كَعْبٍ الأَنْصَارِيُّ يَؤُمَّانِ النَّخْلَ الَّتِي فِيهَا ابْنُ صَيَّادٍ حَتَّى إِذَا دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم طَفِقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ، وَهْوَ يَخْتِلُ أَنْ يَسْمَعَ مِنِ ابْنِ صَيَّادٍ شَيْئًا قَبْلَ أَنْ يَرَاهُ، وَابْنُ صَيَّادٍ مُضْطَجِعٌ عَلَى فِرَاشِهِ فِي قَطِيفَةٍ لَهُ فِيهَا رَمْرَمَةٌ ـ أَوْ زَمْزَمَةٌ ـ فَرَأَتْ أُمُّ ابْنِ صَيَّادٍ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهْوَ يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ، فَقَالَتْ لاِبْنِ صَيَّادِ أَىْ صَافِ، هَذَا مُحَمَّدٌ‏.‏ فَتَنَاهَى ابْنُ صَيَّادٍ، قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لَوْ تَرَكَتْهُ بَيَّنَ ‏"‏‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உபை பின் கஅப் (ரலி) அவர்களும் (குழப்பவாதியான யூதச் சிறுவன்) இப்னு ஸய்யாத் இருந்த பேரீச்சந் தோட்டத்தை நாடிச் சென்றார்கள். (தோட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நுழைந்தவுடன் இப்னு ஸய்யாத் தம்மைப் பார்ப்பதற்கு முன்பே, அவனிடமிருந்து எதையேனும் கேட்டுவிட வேண்டும் எனத் திட்டமிட்டபடி பேரீச்ச மரங்களுக் கிடையே தம்மை மறைத்துக்கொண்டு நடக்கலானார்கள். இப்னு ஸய்யாத் தன் படுக்கையில் ஒரு பூம்பட்டுப் போர்வைக் குள் (குறிகாரர்கள் முணுமுணுப்பதைப் போல்) எதையோ முணுமுணுத்தபடி படுத்திருந்தான். நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களுக் கிடையே தம்மை மறைத்துக்கொண்டு வருவதை இப்னு ஸய்யாதின் தாய் பார்த்து விட்டாள். அவள் தன் மகனை நோக்கி, ‘‘ஸாஃபியே! இதோ முஹம்மத் (வந்து கொண்டிருக்கிறார்)” என்று கூறிவிட்டாள். உடனே இப்னு ஸய்யாத் விழிப்படைந்து முணுமுணுப்பதை நிறுத்திவிட்டான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவள் (இப்னு ஸய்யாதின் தாய்) அவனை (உஷார்படுத்தாமல்) விட்டு விட்டிருந்தால், (தன் உண்மை நிலையை அவனே) அம்பலப்படுத்திவிட்டிருப்பான்” என்று கூறினார்கள்.2 அத்தியாயம் :
ஹதீஸ் 2639 — Sahih al Bukhari 52:3
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ جَاءَتِ امْرَأَةُ رِفَاعَةَ الْقُرَظِيِّ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ كُنْتُ عِنْدَ رِفَاعَةَ فَطَلَّقَنِي فَأَبَتَّ طَلاَقِي، فَتَزَوَّجْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الزَّبِيرِ، إِنَّمَا مَعَهُ مِثْلُ هُدْبَةِ الثَّوْبِ‏.‏ فَقَالَ ‏ "‏ أَتُرِيدِينَ أَنْ تَرْجِعِي إِلَى رِفَاعَةَ لاَ حَتَّى تَذُوقِي عُسَيْلَتَهُ وَيَذُوقَ عُسَيْلَتَكِ ‏"‏‏.‏ وَأَبُو بَكْرٍ جَالِسٌ عِنْدَهُ وَخَالِدُ بْنُ سَعِيدِ بْنِ الْعَاصِ بِالْبَابِ يَنْتَظِرُ أَنْ يُؤْذَنَ لَهُ، فَقَالَ يَا أَبَا بَكْرٍ، أَلاَ تَسْمَعُ إِلَى هَذِهِ مَا تَجْهَرُ بِهِ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘நான் ரிஃபாஆவிடம் (அவருடைய மணபந்தத்தில்) இருந்தேன். பிறகு அவர் என்னை மணவிலக்குச் செய்து மணவிலக்கை முடிவானதாக்கிவிட்டார். ஆகவே, நான் அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஸபீர் (ரலி) அவர்களை மணந்து கொண்டேன். அவரிடம் (இன உறுப்பு என்று) இருப்பதெல்லாம் (இந்த முகத்திரைத்) துணியின் குஞ்சத்தைப் போன்றதுதான் (அவர் ஆண்மை குறைந்தவர்)” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீ ரிஃபாஆவிடம் திரும்பிச் செல்ல விரும்புகிறாயா? நீ (உன் இரண்டாவது கணவரான) இவரிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்காத வரையிலும், இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்காதவரையிலும் உன் முன்னாள் கணவரை நீ மணந்து கொள்வதென்பது முடியாது” என்று கூறி னார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந் தார்கள். காலித் பின் சயீத் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், தமக்கு உள்ளே நுழைய அனுமதியளிக்கப்படும் என்று எதிர்பார்த்த வண்ணம் வாசலில் நின்றுகொண்டிருந் தார்கள். அவர்கள், ‘‘அபூபக்ரே! இந்தப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் பகிரங்க மாகச் சொல்லிக்கொண்டிருப்பதை நீங்கள் செவியுறவில்லையா?” என்று (வாசலில் நின்றபடியே) கேட்டார்கள்.3 அத்தியாயம் :
ஹதீஸ் 2640 — Sahih al Bukhari 52:4
حَدَّثَنَا حِبَّانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ أَبِي حُسَيْنٍ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ، أَنَّهُ تَزَوَّجَ ابْنَةً لأَبِي إِهَابِ بْنِ عَزِيزٍ، فَأَتَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ قَدْ أَرْضَعْتُ عُقْبَةَ وَالَّتِي تَزَوَّجَ‏.‏ فَقَالَ لَهَا عُقْبَةُ مَا أَعْلَمُ أَنَّكِ أَرْضَعْتِنِي وَلاَ أَخْبَرْتِنِي‏.‏ فَأَرْسَلَ إِلَى آلِ أَبِي إِهَابٍ يَسْأَلُهُمْ فَقَالُوا مَا عَلِمْنَا أَرْضَعَتْ صَاحِبَتَنَا‏.‏ فَرَكِبَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ فَسَأَلَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ كَيْفَ وَقَدْ قِيلَ ‏"‏‏.‏ فَفَارَقَهَا، وَنَكَحَتْ زَوْجًا غَيْرَهُ‏.‏
உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அபூஇஹாப் பின் அஸீஸ் (ரலி) அவர்களின் மகளை மணந்துகொண்டேன். ஒரு பெண் என்னிடம் வந்து, ‘‘உங்களுக் கும் நீங்கள் மணந்துகொண்ட பெண்ணுக் கும் (உங்கள் மழலைப் பருவத்தில்) நான் பாலூட்டியிருக்கிறேன்” என்று கூறினாள். நான், ‘‘நீ எனக்குப் பாலூட்டியதை நான் அறியமாட்டேன்; (நான் மணம் புரிந்துகொண்டபோது) நீ எனக்கு (இதை) அறிவிக்கவில்லையே” என்று கூறிவிட்டு, அபூஇஹாபின் குடும்பத்தாரிடம் (இது உண்மைதானா என்று) கேட்டனுப்பினேன். அவர்கள், ‘‘எங்கள் பெண்ணுக்கு அவள் பாலூட்டியதாக நாங்கள் அறியவில்லை” என்று கூறினர். உடனே (மக்காவில் இருந்த) நான், மதீனாவிலிருந்த நபி (ஸல்) அவர்களிடம் (தீர்ப்புப் பெறுவதற்காக) பயணித்துச் சென்று அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(நீயும் உன் மனைவியும் ஒரே செவிலித்தாயிடம் பால்குடித்ததாகச்) சொல்லப்பட்டுவிட்ட பின்னால், (நீங்கள் இருவரும் இணைந்து வாழ்வது) எப்படி (செல்லும்)?” என்று கூறினார்கள். ஆகவே, நான் அவளைப் பிரிந்துவிட்டேன். அவள் வேறொரு கணவனை மணந்து கொண்டாள்.4 அத்தியாயம் :
ஹதீஸ் 2641 — Sahih al Bukhari 52:5
حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُتْبَةَ، قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ يَقُولُ إِنَّ أُنَاسًا كَانُوا يُؤْخَذُونَ بِالْوَحْىِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَإِنَّ الْوَحْىَ قَدِ انْقَطَعَ، وَإِنَّمَا نَأْخُذُكُمُ الآنَ بِمَا ظَهَرَ لَنَا مِنْ أَعْمَالِكُمْ، فَمَنْ أَظْهَرَ لَنَا خَيْرًا أَمِنَّاهُ وَقَرَّبْنَاهُ، وَلَيْسَ إِلَيْنَا مِنْ سَرِيرَتِهِ شَىْءٌ، اللَّهُ يُحَاسِبُهُ فِي سَرِيرَتِهِ، وَمَنْ أَظْهَرَ لَنَا سُوءًا لَمْ نَأْمَنْهُ وَلَمْ نُصَدِّقْهُ، وَإِنْ قَالَ إِنَّ سَرِيرَتَهُ حَسَنَةٌ‏.‏
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் மக்கள் வேத அறிவிப்பு (வஹீ) வாயிலாக (இரகசியமாகச் செய்த குற்றங்கள் அம்பலமாகி) தண்டிக் கப்பட்டுவந்தார்கள். இப்போது (நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின்) வேத அறிவிப்பு நின்றுபோய்விட்டது. இப்போது நாம் உங்களைப் பிடி(த்து தண்டி)ப்ப தெல்லாம் உங்கள் செயல்களில் எமக்கு வெளிப்படையாகத் தெரிபவற்றைக் கொண்டுதான். ஆகவே, எவர் எம்மிடம் நன்மையை வெளிப்படுத்துகின்றாரோ அவரை நம்பிக்கைக்குரியவராக்கி கௌரவமாக நடத்துவோம். அவரது இரகசியம் எதையும் கணக்கிலெடுக்கமாட்டோம். அவரது அந்தரங்கம் குறித்து இறைவனே கணக்குக் கேட்பான். எவர் நம்மிடம் தீமையை வெளிப்படுத்துகிறாரோ அவரை நாம் நம்பவோ (அவர் சொல்லும் சமாதானத்தை) உண்மைப்படுத்தவோமாட்டோம்; அவர் தமது அந்தரங்கம் அழகானது என்று வாதிட்டாலும் சரியே.5 அத்தியாயம் :
ஹதீஸ் 2642 — Sahih al Bukhari 52:6
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ مُرَّ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِجَنَازَةٍ، فَأَثْنَوْا عَلَيْهَا خَيْرًا فَقَالَ ‏"‏ وَجَبَتْ ‏"‏‏.‏ ثُمَّ مُرَّ بِأُخْرَى فَأَثْنَوْا عَلَيْهَا شَرًّا ـ أَوْ قَالَ غَيْرَ ذَلِكَ ـ فَقَالَ ‏"‏ وَجَبَتْ ‏"‏‏.‏ فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ، قُلْتَ لِهَذَا وَجَبَتْ، وَلِهَذَا وَجَبَتْ، قَالَ ‏"‏ شَهَادَةُ الْقَوْمِ، الْمُؤْمِنُونَ شُهَدَاءُ اللَّهِ فِي الأَرْضِ ‏"‏‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இருந்த இடத்தின் வழியாக ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டு செல்லப்பட்டது. இறந்தவரின் நற்பண்புகள் குறித்து மக்கள் புகழ்ந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உறுதியாகிவிட்டது” என்று கூறினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டுசெல்லப்பட்டது. மக்கள் அதன் தீய பண்புகள் குறித்து இகழ்ந்தனர். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், ‘‘உறுதி யாகிவிட்டது” என்று கூறினார்கள். அப்போது ‘‘அல்லாஹ்வின் தூதரே! அதற்கும் யிஉறுதியாகிவிட்டது’ என்று கூறினீர்கள்; இதற்கும் யிஉறுதியாகிவிட்டது’ என்று கூறினீர்களே. (இரண்டிற்குமே இவ்வாறு கூறக் காரணமென்ன?)” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘இது சமூகத்தின் சாட்சியமாகும். இறைநம்பிக்கை யாளர்கள் பூமியில் இறைவனின் சாட்சிகள் ஆவர்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2643 — Sahih al Bukhari 52:7
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي الْفُرَاتِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ أَبِي الأَسْوَدِ، قَالَ أَتَيْتُ الْمَدِينَةَ وَقَدْ وَقَعَ بِهَا مَرَضٌ، وَهُمْ يَمُوتُونَ مَوْتًا ذَرِيعًا، فَجَلَسْتُ إِلَى عُمَرَ ـ رضى الله عنه ـ فَمَرَّتْ جِنَازَةٌ فَأُثْنِيَ خَيْرٌ فَقَالَ عُمَرُ وَجَبَتْ‏.‏ ثُمَّ مُرَّ بِأُخْرَى فَأُثْنِيَ خَيْرًا فَقَالَ وَجَبَتْ‏.‏ ثُمَّ مُرَّ بِالثَّالِثَةِ فَأُثْنِيَ شَرًّا، فَقَالَ وَجَبَتْ‏.‏ فَقُلْتُ مَا وَجَبَتْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ قَالَ قُلْتُ كَمَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ أَيُّمَا مُسْلِمٍ شَهِدَ لَهُ أَرْبَعَةٌ بِخَيْرٍ أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ ‏"‏‏.‏ قُلْنَا وَثَلاَثَةٌ قَالَ ‏"‏ وَثَلاَثَةٌ ‏"‏‏.‏ قُلْتُ وَاثْنَانِ قَالَ ‏"‏ وَاثْنَانِ ‏"‏‏.‏ ثُمَّ لَمْ نَسْأَلْهُ عَنِ الْوَاحِدِ‏.‏
அபுல்அஸ்வத் அத்துஅலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மதீனா நகரில் (கொள்ளை) நோய் பரவியிருந்தபோது நான் அங்கு சென்றேன். மக்கள் பரவலாகவும் விரைவாகவும் இறந்துகொண்டிருந்தார்கள். நான் உமர் (ரலி) அவர்களிடம் சென்று அமர்ந்தேன். அப்போது ஒரு பிரேதம் (ஜனாஸா) சென்றது. அதைக் குறித்து புகழ்ந்துரைக்கப்பட்டது. உடனே உமர் (ரலி) அவர்கள், ‘‘உறுதியாகி விட்டது” என்று கூறினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. அதைக் குறித்தும் புகழ்ந்துரைக் கப்பட்டது. அதற்கும் உமர் (ரலி) அவர்கள், ‘‘உறுதியாகி விட்டது” என்று கூறினார்கள். பிறகு மூன்றாவது ஜனாஸா கடந்து சென்றது. அதைக் குறித்து இகழ்ந்து பேசப்பட்டது. உமர் (ரலி) அவர்கள், ‘‘உறுதியாகி விட்டது” என்று கூறினார்கள். நான், ‘‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! என்ன உறுதியாகிவிட்டது?” என்று கேட்டேன். அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே நானும் சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘எந்த முஸ்லிமுக்கு நான்கு பேர், ‘அவர் நல்லவர்’ என்று சாட்சியம் சொல்கின்றார் களோ அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் அனுமதிப்பான்” என்று கூறினார்கள். நாங்கள், ‘‘மூன்று பேர் சாட்சி சொன்னாலுமா?” என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்; மூன்று பேர் சாட்சியம் சொன்னாலும் சரி (அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் அனுமதிப்பான்)” என்று கூறினார்கள். நாங்கள், ‘‘இரண்டு பேர் சாட்சியம் சொன்னாலுமா?” என்று கேட்டோம். அவர்கள், ‘‘ஆம்; இரண்டு பேர் சாட்சியம் சொன்னாலும் சரியே” என்று கூறினார்கள். பிறகு நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒருவரைப் பற்றி (‘‘ஒருவர் சாட்சி சொன்னாலுமா?” என்று) கேட்கவில்லை. அத்தியாயம் :
ஹதீஸ் 2644 — Sahih al Bukhari 52:8
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا الْحَكَمُ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ اسْتَأْذَنَ عَلَىَّ أَفْلَحُ فَلَمْ آذَنْ لَهُ، فَقَالَ أَتَحْتَجِبِينَ مِنِّي وَأَنَا عَمُّكِ فَقُلْتُ وَكَيْفَ ذَلِكَ قَالَ أَرْضَعَتْكِ امْرَأَةُ أَخِي بِلَبَنِ أَخِي‏.‏ فَقَالَتْ سَأَلْتُ عَنْ ذَلِكَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏ "‏ صَدَقَ أَفْلَحُ، ائْذَنِي لَهُ ‏"‏‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என் வீட்டில் நுழைவதற்கு ‘அஃப்லஹ்’ (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். நான் அவர்களுக்கு அனுமதி தரவில்லை. அவர்கள், ‘‘நான் உன் தந்தையின் சகோதர ராயிருக்க, நீ என்னிடமே திரையிட்டு (மறைத்து)க்கொள்கிறாயா?” என்று கேட்டார்கள். நான், ‘‘அதெப்படி (நீங்கள் என் தந்தையின் சகோதரராக முடியும்)?” என்று கேட்டேன். அதற்கு அவர், ‘‘என் சகோதரரின் மனைவி என் சகோதரரின் (வாயிலாக அவரிடம் ஊறிய) பாலை உனக்குப் புகட்டியுள்ளார்” என்று கூறினார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைப் பற்றிக் கேட்டேன். அவர்கள், ‘‘அஃப்லஹ் சொன்னது உண்மையே. (நீ திரையின்றி இருக்கும் நிலையில் உன் முன்னால் வர) அவருக்கு அனுமதி கொடுக்கலாம்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2645 — Sahih al Bukhari 52:9
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي بِنْتِ حَمْزَةَ ‏ "‏ لاَ تَحِلُّ لِي، يَحْرُمُ مِنَ الرَّضَاعِ مَا يَحْرُمُ مِنَ النَّسَبِ، هِيَ بِنْتُ أَخِي مِنَ الرَّضَاعَةِ ‏"‏‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ஹம்ஸா (ரலி) அவர்களின் மகள் தொடர்பாக, ‘‘அவரை மணப்பது எனக்கு அனுமதிக்கப்பட்டதன்று. (ஏனெனில்) இரத்த உறவால் எவையெல் லாம் தடை செய்யப்படுமோ அவை யெல்லாம் (செவிலித் தாயிடம்) பால் குடிப்பதாலும் தடை செய்யப்படும். அவள் என் பால்குடிச் சகோதரரின் (ஹம்ஸாவின்) மகள் ஆவாள்” என்று கூறினார்கள்.7 அத்தியாயம் :
ஹதீஸ் 2646 — Sahih al Bukhari 52:10
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ عِنْدَهَا، وَأَنَّهَا سَمِعَتْ صَوْتَ رَجُلٍ يَسْتَأْذِنُ فِي بَيْتِ حَفْصَةَ‏.‏ قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أُرَاهُ فُلاَنًا‏.‏ لِعَمِّ حَفْصَةَ مِنَ الرَّضَاعَةِ‏.‏ فَقَالَتْ عَائِشَةُ يَا رَسُولَ اللَّهِ، هَذَا رَجُلٌ يَسْتَأْذِنُ فِي بَيْتِكَ‏.‏ قَالَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أُرَاهُ فُلاَنًا ‏"‏‏.‏ لِعَمِّ حَفْصَةَ مِنَ الرَّضَاعَةِ‏.‏ فَقَالَتْ عَائِشَةُ لَوْ كَانَ فُلاَنٌ حَيًّا ـ لِعَمِّهَا مِنَ الرَّضَاعَةِ ـ دَخَلَ عَلَىَّ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ نَعَمْ، إِنَّ الرَّضَاعَةَ تُحَرِّمُ مَا يَحْرُمُ مِنَ الْوِلاَدَةِ ‏"‏‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். நான் ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டில் (யாரோ) ஒரு மனிதர் உள்ளே செல்ல அனுமதி கேட்கும் குரலைச் செவியுற்றேன். எனவே, நான் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவர் (ஹஃப்ஸாவின் வீட்டுக்குள் செல்ல அனுமதி கேட்பவர்) ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என நான் நினைக்கிறேன்; அல்லாஹ்வின் தூதரே! இதோ தங்கள் (துணைவியார்) இல்லத் திற்குள் செல்ல இந்த மனிதர் அனுமதி கேட்கிறார்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்களும், ‘‘அவர் ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என்றே நானும் நினைக்கிறேன்” என்று கூறினார்கள். நான், ‘‘இன்னார் உயிருடன் இருந்தால் அவர் திரையின்றி என்னைச் சந்திக்க முடியும்தானே!” என்று என் பால்குடித் தந்தையின் சகோதரர் குறித்துக் கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஆம். (சந்திக்கலாம்.) பிறப்பு எந்த உறவுகளையெல்லாம் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவுகளாக்குமோ அந்த உறவுகளையெல்லாம் பால்குடியும் நெருங்கிய உறவுகளாக்கிவிடும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.