حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ وَهْوَ فِيهَا فَاجِرٌ، لِيَقْتَطِعَ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ، لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ ". قَالَ فَقَالَ الأَشْعَثُ بْنُ قَيْسٍ فِيَّ وَاللَّهِ كَانَ ذَلِكَ، كَانَ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ مِنَ الْيَهُودِ أَرْضٌ فَجَحَدَنِي، فَقَدَّمْتُهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَلَكَ بَيِّنَةٌ ". قَالَ قُلْتُ لاَ. قَالَ فَقَالَ لِلْيَهُودِيِّ " احْلِفْ ". قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِذًا يَحْلِفَ وَيَذْهَبَ بِمَالِي. قَالَ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً} إِلَى آخِرِ الآيَةِ.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமின் செல்வத்தைப் பறித் துக்கொள்வதற்காக, ஒரு பிரமாணத்தின் போது திட்டமிட்டுப் பொய் சொல்லி சத்தியம் செய்கின்றவர், (மறுமையில்) தம்மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கும் நிலையில்தான் அவனைச் சந்திப்பார். இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்: அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் (வந்து), ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! என் விவகாரத்தில்தான் இது நடந்தது. எனக்கும் ஒரு யூதருக்குமிடையே ஒரு நிலம் (தொடர்பான தகராறு) இருந்து வந்தது. அந்த யூதர் என் உரிமையை மறுத்தார். நான் அவரை நபி (ஸல்) அவர்களின் முன்னால் (கொண்டுபோய்) நிறுத்தினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உமக்கு ஆதாரம் ஏதும் உண்டா?” என்று என்னிடம் கேட்டார்கள். நான், ‘‘இல்லை” என்று பதிலளித்தேன். அந்த யூதரிடம் நபி (ஸல்) அவர்கள், ‘‘(நிலம் உன்னுடையது என்று) சத்தியம் செய்” என்று கூறினார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அப்படி யென்றால், அவர் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்து என் செல்வத்தைக் கொண்டுபோய்விடுவாரே!” என்று கூறினேன். அப்போதுதான், ‘‘எவர் அல்லாஹ்விடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் தம் சத்தியங்களையும் சொற்ப விலைக்கு விற்றுவிடுகிறார்களோ அவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. மறுமை நாளில் அவர்களிடம் அல்லாஹ் பேசவும்மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும்மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்கு வதைக்கும் வேதனைதான் கிடைக்கும்” எனும் (3:77) வசனத்தை அல்லாஹ் அருளினான்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2668 — Sahih al Bukhari 52:31
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا نَافِعُ بْنُ عُمَرَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ كَتَبَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَضَى بِالْيَمِينِ عَلَى الْمُدَّعَى عَلَيْهِ.
இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பிரதிவாதிதான் சத்தியம் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்ததாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எனக்கு (கடிதம்) எழுதி னார்கள். அத்தியாயம் :
அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘ஒரு செல்வத்தை (அநியாயமாக) அடைவதற்காக, ஒரு பிரமாணத்தின்போது பொய்ச் சத்தியம் செய்பவர், தம்மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கும் நிலையில்தான் அவனை (மறுமையில்) சந்திப்பார்” (என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.) பிறகு அதை உறுதிப்படுத்தும் விதத்தில் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ‘‘எவர் அல்லாஹ்விடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்றுவிடுகிறார்களோ, அவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும்மாட்டான்; அவர்களைப் பார்க்கவும்மாட்டான். மாறாக, அவர்களுக்கு வதைக்கும் வேதனைதான் கிடைக்கும்” (3:77) எனும் வசனத்தை அருளினான் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள். பிறகு அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் எங்களிடம் வந்து, ‘‘அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் லி ரலி) உங்களிடம் என்ன சொல்கிறார்?” என்று கேட்க, நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தோம். அதற்கு அவர்கள் சொன்னார்கள்: அவர் உண்மையே சொன்னார். என் விவகாரத்தில்தான் அந்த வசனம் இறங்கியது. எனக்கும் ஒரு மனிதருக்குமிடையே ஒரு விஷயத்தில் வழக்கு இருந்துவந்தது. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுசென்றோம். அவர்கள், ‘‘உம்முடைய இரு சாட்சிகள். அல்லது அவருடைய சத்தியம் (தீர்ப்பளிக்கத் தேவைப்படுகின்றன)” என்று கூறினார்கள். நான், ‘‘அப்படியென்றால், அவர் (அந்த யூதர் தயங்காமல்) பொய்ச் சத்தியம் செய்வாரே; (பொய்ச் சத்தியம் செய்வதைப் பற்றி) கவலைப்படமாட்டாரே” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘எவர் ஒரு பிரமாணத்தின்போது அதன் மூலம் ஒரு சொத்தை அடைந்துகொள்வதற்காகப் பொய்ச் சத்தியம் செய்கிறாரோ அவர், தம்மீது கோபம் கொண்ட நிலையில்தான் அல்லாஹ்வை (மறுமையில்) சந்திப்பார்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் இந்தச் சொற்களை உறுதிப்படுத்தி (குர்ஆனில் ஒரு வசனத்தை) அல்லாஹ் அருளினான்” என்று கூறிவிட்டு, இந்த இறைவசனத்தை (3:77) ஓதிக்காட்டினார்கள். அத்தியாயம் :

ஹதீஸ் 2671 — Sahih al Bukhari 52:33
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ هِشَامٍ، حَدَّثَنَا عِكْرِمَةُ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ هِلاَلَ بْنَ أُمَيَّةَ، قَذَفَ امْرَأَتَهُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِشَرِيكِ بْنِ سَحْمَاءَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " الْبَيِّنَةُ أَوْ حَدٌّ فِي ظَهْرِكَ ". فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِذَا رَأَى أَحَدُنَا عَلَى امْرَأَتِهِ رَجُلاً يَنْطَلِقُ يَلْتَمِسُ الْبَيِّنَةَ فَجَعَلَ يَقُولُ " الْبَيِّنَةَ وَإِلاَّ حَدٌّ فِي ظَهْرِكَ ". فَذَكَرَ حَدِيثَ اللِّعَانِ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்கள் தம் மனைவியை ஷரீக் பின் சஹ்மாவுடன் இணைத்து விபசாரக் குற்றம் சாட்டினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆதாரம் கொண்டு வா! இல்லையென்றால் (அவதூறு கூறிய தற்குத் தண்டனையாக) உன் முதுகில் சாட்டையடி தரப்படும்” என்று கூறினார்கள். அதற்கு ஹிலால் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர், தம் மனைவியின்மேல் ஒரு மனிதரை (தவறான உறவு கொள்ள)ப் பார்த்தாலும் ஆதாரம் தேடிச் செல்ல வேண்டுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆதாரம் கொண்டுவா! இல்லையென்றால் உன் முதுகில் சாட்டையடி தரப்படும்” என்று மீண்டும் கூறினார்கள். இதையடுத்து சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) தொடர்பான ஹதீஸை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.27 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரிடம் (மறுமை நாளில்) அல்லாஹ் பேசவும்மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும்மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு வதைக்கும் வேதனைதான் கிடைக்கும். ஒருவர், (மக்களின் போக்குவரத்துப்) பாதையில் எஞ்சிய தண்ணீரை வழிப் போக்கர்களுக்கு (தராமல்) தடுக்கும் மனிதர் ஆவார். மற்றொருவர், உலக ஆதாயத்திற் காகவே ஆட்சியாளரிடம் விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்தவர் ஆவார். தாம் விரும்புவதை தமக்குக் கொடுத்தால் (பிரமாணத்தின் அடிப்படையில்) ஆட்சி யாளரிடம் விசுவாசமாக நடந்துகொள்வார். இல்லையெனில் விசுவாசமாக நடந்து கொள்ளமாட்டார். இன்னொருவர் ஒரு மனிதரிடம் அஸ்ர் தொழுகைக்குப் பிறகு ஒரு பொருளுக்கு விலை கூறி, அந்தப் பொருளுக்கு இன்ன விலையைத் தாம் கொடுத்ததாக அல்லாஹ்வின் மீது (பொய்) சத்தியம் செய்ய, (அதை நம்பி) அந்த மனிதர் (அவர் சொன்ன விலைக்கு) அதை எடுத்துக்கொள்ளும்படி செய்தவர் ஆவார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2673 — Sahih al Bukhari 52:35
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ لِيَقْتَطِعَ بِهَا مَالاً لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ ".
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: (பிரமாண வாக்குமூலத்தின்போது) ஒரு செல்வத்தை அபகரித்துக்கொள்ளும் நோக்கத்துடன் சத்தியம் செய்பவர், தம்மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில் தான் (மறுமையில்) அவனைச் சந்திப்பார். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2674 — Sahih al Bukhari 52:36
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم عَرَضَ عَلَى قَوْمٍ الْيَمِينَ فَأَسْرَعُوا، فَأَمَرَ أَنْ يُسْهَمَ بَيْنَهُمْ فِي الْيَمِينِ أَيُّهُمْ يَحْلِفُ.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு கூட்டத்தார் (ஒரு பொருள் தொடர்பாக ஆதாரமேயின்றி ஒவ்வொருவரும் உரிமை கொண்டாடியபோது) சத்தியம் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்கள் (ஒருவரையொருவர்) முந்திக்கொண்டு வந்தார்கள். அவர்களில் யார் (முதலில்) சத்தியம் செய்வதென்பதை அவர்களிடையே (முடிவு செய்வதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போடும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தர விட்டார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் (கடைத்தெருவில்) தமது சரக்கை (மக்கள்முன்) வைத்து, அல்லாஹ் வின் பெயரால் சத்தியமிட்டு, தாம் அதற் குத் தராத விலையைத் தந்திருப்பதாக (பொய்) கூறினார். அது தொடர்பாகத்தான் மேற்கண்ட இறைவசனம் (3:77) அருளப் பட்டது. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: பொய் சொல்லி விலையை ஏற்றுபவர், லிவட்டி வாங்குபவரைப் போன்றுலி மோசடிக்காரர் ஆவார். அத்தியாயம் :
ஹதீஸ் 2676 — Sahih al Bukhari 52:38
حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ كَاذِبًا لِيَقْتَطِعَ مَالَ رَجُلٍ ـ أَوْ قَالَ أَخِيهِ ـ لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ ". وَأَنْزَلَ اللَّهُ تَصْدِيقَ ذَلِكَ فِي الْقُرْآنِ {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً} الآيَةَ. فَلَقِيَنِي الأَشْعَثُ فَقَالَ مَا حَدَّثَكُمْ عَبْدُ اللَّهِ الْيَوْمَ، قُلْتُ كَذَا وَكَذَا. قَالَ فِيَّ أُنْزِلَتْ.
அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘ஒரு மனிதரின் லிஅல்லது சகோதரரின்லி செல்வத்தை அபகரித்துக்கொள்வதற்காக, ஒரு பிரமாண(வாக்கு மூலத்)தின்போது பொய்யாகச் சத்தியம் செய்பவர், தம்மீது கோபம் கொண்ட நிலையில்தான் அல்லாஹ்வை (மறுமையில்) சந்திப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் இதை உறுதிப்படுத்தி, மேற்கண்ட குர்ஆன் வசனத்தை (3:77) அருளினான் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் சொன்னார்கள். அப்போது அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, ‘‘அப்துல்லாஹ் இன்று உங்களிடம் என்ன பேசினார்?” என்று கேட்க, நான். ‘‘இன்னின்ன விஷயங்களைப் பேசினார்” என்று கூறினேன். அதற்கு அவர்கள், ‘‘அந்த வசனம் என் விவகாரத்தில்தான் இறங்கியது” என்று கூறினார்கள். அத்தியாயம் :