Qurani·قرآني
தமிழ்

சாட்சிகள் (ஷஹாதா)

53 ஹதீஸ்கள் · #2637–2689

ஹதீஸ் 2687 — Sahih al Bukhari 52:48
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي خَارِجَةُ بْنُ زَيْدٍ الأَنْصَارِيُّ، أَنَّ أُمَّ الْعَلاَءِ، امْرَأَةً مِنْ نِسَائِهِمْ قَدْ بَايَعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ أَنَّ عُثْمَانَ بْنَ مَظْعُونٍ طَارَ لَهُ سَهْمُهُ فِي السُّكْنَى حِينَ أَقْرَعَتِ الأَنْصَارُ سُكْنَى الْمُهَاجِرِينَ‏.‏ قَالَتْ أُمُّ الْعَلاَءِ فَسَكَنَ عِنْدَنَا عُثْمَانُ بْنُ مَظْعُونٍ، فَاشْتَكَى، فَمَرَّضْنَاهُ حَتَّى إِذَا تُوُفِّيَ وَجَعَلْنَاهُ فِي ثِيَابِهِ دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ رَحْمَةُ اللَّهِ عَلَيْكَ أَبَا السَّائِبِ، فَشَهَادَتِي عَلَيْكَ لَقَدْ أَكْرَمَكَ اللَّهُ‏.‏ فَقَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ وَمَا يُدْرِيكِ أَنَّ اللَّهَ أَكْرَمَهُ ‏"‏‏.‏ فَقُلْتُ لاَ أَدْرِي بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَمَّا عُثْمَانُ فَقَدْ جَاءَهُ ـ وَاللَّهِ ـ الْيَقِينُ وَإِنِّي لأَرْجُو لَهُ الْخَيْرَ، وَاللَّهِ مَا أَدْرِي وَأَنَا رَسُولُ اللَّهِ مَا يُفْعَلُ بِي ‏"‏‏.‏ قَالَتْ فَوَاللَّهِ لاَ أُزَكِّي أَحَدًا بَعْدَهُ أَبَدًا، وَأَحْزَنَنِي ذَلِكَ قَالَتْ فَنِمْتُ فَأُرِيتُ لِعُثْمَانَ عَيْنًا تَجْرِي، فَجِئْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْبَرْتُهُ فَقَالَ ‏"‏ ذَلِكَ عَمَلُهُ ‏"‏‏.‏
காரிஜா பின் ஸைத் அல்அன்சாரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எங்கள் (அன்சாரிப்) பெண்களில் ஒருவரான உம்முல் அலா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்திருந்தார்.34 அவர் என்னிடம் தெரிவித்ததாவது: (மக்கா முஸ்லிம்களான) யிமுஹாஜிர்களை யாருடைய வீட்டில் தங்கவைப்பது’ என்பதை அறிய அன்சாரிகள் சீட்டுக் குலுக்கிப் போட்டபோது (எங்கள் வீடு) உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர் களின் பங்கில் வந்தது. ஆகவே, உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் எங்களிடம் தங்கினார்கள். அவருக்கு நோய் ஏற்பட்ட போது நாங்கள் அவரை கவனித்துக் கொண்டோம். இறுதியில், அவர் இறந்த போது, அவரை அவரது துணிகளில் வைத்து (கஃபனிட்டு)விட்டோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். (நான் உஸ்மான் பின் மழ்வூனை நோக்கி), ‘‘அபூசாயிபே! உங்கள்மீது இறையருள் உண்டாவதாக! அல்லாஹ் உங்களைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சி” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரை அல்லாஹ் கண்ணியப் படுத்தியுள்ளான் என்பது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தெரியாது. என் தந்தையும், என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! உஸ்மானுக்கோ மரணம் வந்துவிட்டது. நான் அவருக்கு நன்மையையே எதிர்பார்க்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும், அவரிடம் எப்படி நடந்துகொள்ளப்படும் (மறுமையில் அவரது நிலை என்னவாகும்?)› என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அதன் பிறகு நான் யாரையும் தூய்மையானவர் என்று ஒருபோதும் கூறுவதேயில்லை. நபியவர்கள் இப்படிச் சொன்னது எனக்குக் கவலையளித்தது. பிறகு நான் உறங்கினேன். அப்போது கனவில் உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்களுக்கு (சொர்க்கத்தில்) ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீருற்று (கொடுக்கப்பட்டு) இருப்பதாகக் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அந்தக் கனவைத் தெரிவித்தேன். அதற்கு அவர்கள் ‘‘அது அவருடைய (நற்)செயல்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2688 — Sahih al Bukhari 52:49
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَرَادَ سَفَرًا أَقْرَعَ بَيْنَ نِسَائِهِ، فَأَيَّتُهُنَّ خَرَجَ سَهْمُهَا خَرَجَ بِهَا مَعَهُ، وَكَانَ يَقْسِمُ لِكُلِّ امْرَأَةٍ مِنْهُنَّ يَوْمَهَا وَلَيْلَتَهَا، غَيْرَ أَنَّ سَوْدَةَ بِنْتَ زَمْعَةَ وَهَبَتْ يَوْمَهَا وَلَيْلَتَهَا لِعَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم، تَبْتَغِي بِذَلِكَ رِضَا رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணம் செய்ய விரும்பினால் தம் துணைவியரிடையே சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் யாருடைய பெயர் வருகிறதோ அவர் நபி (ஸல்) அவர்களுடன் (பயணம்) புறப்படுவார். நபி (ஸல்) அவர்கள் (தம்) துணைவியரில் ஒவ்வொருவருக்கும் தமது இரவையும் பகலையும் பங்கிட்டிருந்தார்கள். (ஆனால், நபியவர்களின் துணைவியரில் ஒருவரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் மட்டும் தமது பகலையும் இரவையும் எனக்குப் பரிசளித்துவிட்டார். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களின் அன்பை (பெற) விரும்பியே அவர்கள் இப்படிச் செய்தார்கள். இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.35 அத்தியாயம் :
ஹதீஸ் 2689 — Sahih al Bukhari 52:50
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرٍ عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الأَوَّلِ، ثُمَّ لَمْ يَجِدُوا إِلاَّ أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لاَسْتَهَمُوا، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لاَسْتَبَقُوا إِلَيْهِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي الْعَتَمَةِ وَالصُّبْحِ لأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை அறிவிப்புச் செய்வதிலும் (கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசையி(ல் நிற்பதி)லும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் (அதை அடைந்துகொள்ள) சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போகுமானால், நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். தொழுகைக்கு அதன் ஆரம்ப வேளையில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக்கொள்வார்கள். இஷா தொழுகையிலும். ஃபஜ்ர் தொழுகையிலும் உள்ள நன்மையை அவர்கள் அறிவார்களாயின் அதற்குத் (தரையில்) தவழ்ந்தாவது அவர்கள் வந்து விடுவார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.36 அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.