சூரா அல்-அஹ்ஸாப், திருக்குர்ஆனின் 33வது அத்தியாயம், 73 ஆயத்துகளைக் கொண்ட மதனி சூரா.
தூதரே! நீரும் உம்மைப் பின்பற்றியவர்களும் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுவதில் நிலைத்திருங்கள். அவனை மாத்திரமே அஞ்சுங்கள். நிராகரிப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்களின் மனம் விரும்புபவற்றுக்கு நீர் கட்டுப்படாதீர்.