சூரா ஃபாத்திர், திருக்குர்ஆனின் 35வது அத்தியாயம், 45 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.
வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவன் தான் விதித்த கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக வானவர்களை தூதுவர்களாக ஆக்கியுள்ளான். அவர்களில் சிலர் நபிமார்களுக்கு வஹியை - இறைச்செய்தியை- கொண்டு சேர்க்கிறார்கள்.