சூரா அல்-மும்தஹினா, திருக்குர்ஆனின் 60வது அத்தியாயம், 13 ஆயத்துகளைக் கொண்ட மதனி சூரா.
அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! என் எதிரிகளையும் உங்கள் எதிரிகளையும் நட்பைப் பரிமாறும் தோழர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அவர்கள் உங்களின் தூதர் உங்களிடம் கொண்டுவந்த மார்க்கத்தை நிராகரித்துவிட்டார்கள். தூதரை அவரது ஊரிலிருந்து வெளியேற்றிவிட்டார்கள்.