சூரா அல்-கஹ்ஃப்

சூரா அல்-கஹ்ஃப், திருக்குர்ஆனின் 18வது அத்தியாயம், 110 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

கண்ணியம் மற்றும் பரிபூரண பண்புகளைக்கொண்டும் வெளிப்படையான, அந்தரங்கமான அருட்கொடைகளைக் கொண்டும் புகழ்தல் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. அவனே தன் அடியார், தன் தூதர் முஹம்மது மீது குர்ஆனை இறக்கினான். இந்தக் குர்ஆனில் அவன் எந்தக் கோணலையும் சத்தியத்தை விட்டும் சாய்வதனையும் ஏற்படுத்தவில்லை.