சூரா அல்-அன்ஆம், திருக்குர்ஆனின் 6வது அத்தியாயம், 165 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.
முழுமையான பரிபூரணத்தைக் கொண்டு வர்ணிப்பதும், உயர் சிறப்புக்களைக் கொண்டு அன்புடன் கலந்த புகழ்ச்சியும் அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவன்தான் வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தான். இரவையும் பகலையும் அடுத்தடுத்து வரக்கூடியதாக படைத்துள்ளான். இரவை இருள் மிக்கதாகவும் பகலை வெளிச்சம்மிக்தாகவும் அவன் ஆக்கியுள்ளான்.