சூரா அல்-ஹஜ், திருக்குர்ஆனின் 22வது அத்தியாயம், 78 ஆயத்துகளைக் கொண்ட மதனி சூரா.
மனிதர்களே! உங்கள் இறைவன் ஏவிய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக மறுமை நெருங்கும்போது ஏற்படும் பூமியதிர்ச்சி மற்றும் ஏனைய பயங்கரங்கள் ஒரு மகத்தான நிகழ்வாகும். அல்லாஹ்வுக்கு விருப்பமான செயல்களைச் செய்து அந்த நாளுக்காக உங்களை தயாராக்குவது அவசியமாகும்.