சூரா அத்-தலாக், திருக்குர்ஆனின் 65வது அத்தியாயம், 12 ஆயத்துகளைக் கொண்ட மதனி சூரா.
நபியே! நீரோ உம் சமூகத்தில் யாரேனுமோ தம் மனைவியரை விவாகரத்து செய்ய விரும்பினால் அந்த மனைவியர் உடலுறவு இடம்பெறாத தூய்மையாக இருக்கும் ஆரம்ப காலங்களில் விவாகரத்து செய்யுங்கள். நீங்கள் விரும்பினால் அவர்களை திரும்ப மனைவியாக மீட்டிக்கொள்ளும் பொருட்டு இத்தாவின் கால அளவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.