சூரா அல்-ஹதீத்

சூரா அல்-ஹதீத், திருக்குர்ஆனின் 57வது அத்தியாயம், 29 ஆயத்துகளைக் கொண்ட மதனி சூரா.

வானங்களிலும் பூமியிலும் உள்ள படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் தூய்மையைப் பறைசாற்றுகின்றன. அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தான் படைப்பிலும், நிர்ணயத்திலும் அவன் ஞானம் மிக்கவன்.