சூரா அல்-மாயிதா

சூரா அல்-மாயிதா, திருக்குர்ஆனின் 5வது அத்தியாயம், 120 ஆயத்துகளைக் கொண்ட மதனி சூரா.

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கும் உங்கள் படைப்பாளனுக்குமிடையே இருக்கும் உறுதியான ஒப்பந்தங்களையும் உங்களுக்கும் ஏனைய அடியார்களுக்குமிடையே செய்துகொண்ட ஒப்பந்தங்களையும் முழுமையாக நிறைவேற்றுங்கள். அல்லாஹ் உங்கள் மீது கருணை செலுத்தும் பொருட்டு ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை உங்களுக்கு ஆகுமாக்கித் தந்துள்ளான்.