சூரா அல்-ஹுஜுராத், திருக்குர்ஆனின் 49வது அத்தியாயம், 18 ஆயத்துகளைக் கொண்ட மதனி சூரா.
அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவன் விதித்தவற்றைப் பின்பற்றியவர்களே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முன்னால் சொல்லாலோ, செயலாலோ முந்தாதீர்கள். அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன். உங்களின் செயல்களை நன்கறிந்தவன்.