சூரா அல்-முனாஃபிகூன்

சூரா அல்-முனாஃபிகூன், திருக்குர்ஆனின் 63வது அத்தியாயம், 11 ஆயத்துகளைக் கொண்ட மதனி சூரா.

தூதரே! - உம்முடைய அவைக்கு நிராகரிப்பை மறைத்து இஸ்லாத்தை வெளிப்படுத்தும் நயவஞ்சகர்கள் வந்தால் “நிச்சயமாக நீர் உண்மையாகவே அல்லாஹ்வின் தூதர்தாம் என்பதற்கு நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று கூறுகிறார்கள். நிச்சயமாக அல்லாஹ் நீர் அவனின் தூதர்தான் என்பதை அறிவான்.