சூரா அந்-நிசா, திருக்குர்ஆனின் 4வது அத்தியாயம், 176 ஆயத்துகளைக் கொண்ட மதனி சூரா.
மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள். அவன்தான் உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான். அந்த ஆன்மாதான் உங்களின் தந்தை ஆதமாவார். அவரிலிருந்து அவரது மனைவியும் உங்களின் தாயுமான ஹவ்வாவைப் படைத்தான். அவர்கள் இருவரிலிருந்து பல மனிதர்களை ஆண்களாகவும் பெண்களாகவும் பூமியின் பல பாகங்களிலும் பரவச் செய்தான்.