சூரா அல்-முஜாதலா

சூரா அல்-முஜாதலா, திருக்குர்ஆனின் 58வது அத்தியாயம், 22 ஆயத்துகளைக் கொண்ட மதனி சூரா.

தூதரே! - தன் கணவன் (அவ்ஸ் இப்னு அஸ்ஸாமித்) தன்னை அவரது தாயோடு ஒப்பிட்டுக் கூறியதால் அவரைக்குறித்து உம்மை நாடி வந்து தன் கணவர் அவளுடன் நடந்த விதத்தை அல்லாஹ்விடம் முறையிட்டுக் கொண்டிருந்த (கவ்லா பின்த் ஸஃலபா என்ற) அந்தப் பெண்ணின் பேச்சை அல்லாஹ் செவியேற்றுவிட்டான். உங்கள் இருவரின் உரையாடலையும் அல்லாஹ் செவியேற்கிறான்.