சூரா அல்-அன்ஃபால், திருக்குர்ஆனின் 8வது அத்தியாயம், 75 ஆயத்துகளைக் கொண்ட மதனி சூரா.
தூதரே! - உம்முடைய தோழர்கள் போர்ச் செல்வங்களைக் குறித்து - அவற்றை எவ்வாறு பங்கிட்டீர்கள்? யாருக்கெல்லாம் வழங்குவது? என்று கேட்கிறார்கள். -தூதரே! - நீர் அவர்களின் கேள்விக்கு பதிலாக கூறுவீராக: “போர்ச் செல்வங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியன. அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அவற்றை வழங்குவார்கள்; பங்கிடுவார்கள்.