சூரா அத்-தஹ்ரீம்

சூரா அத்-தஹ்ரீம், திருக்குர்ஆனின் 66வது அத்தியாயம், 12 ஆயத்துகளைக் கொண்ட மதனி சூரா.

தூதரே! அல்லாஹ் உமக்கு அனுமதித்த அடிமைப் பெண் மாரியாவை அனுபவிப்பதை ஏன் தடைசெய்து கொள்கிறீர்? இதன்மூலம் ரோஷம் கொண்ட உம் மனைவியரைத் திருப்திப்படுத்த விரும்புகிறீரா? அல்லாஹ் உம்மை மன்னிக்கக்கூடியவனாகவும் உம்மீது மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.