சூரா அல்-ஃபாத்திஹா

சூரா அல்-ஃபாத்திஹா, திருக்குர்ஆனின் 1வது அத்தியாயம், 7 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

அல்லாஹ்விடம் உதவிதேடியவராகவும் அவனது பெயரைக் கூறுவதன் மூலம் அருள்வளத்தை எதிர்பார்த்தவராகவும் குர்ஆன் ஓதுவதை ஆரம்பம் செய்கிறேன். பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்ற வசனம் அல்லாஹ்வின் மூன்று அழகிய பெயர்களை உள்ளடக்கியுள்ளது. 1. அல்லாஹ்: வணங்கப்படுவதற்கு உண்மையில் தகுதியானவன்.