சூரா அஸ்-ஸஃப்

சூரா அஸ்-ஸஃப், திருக்குர்ஆனின் 61வது அத்தியாயம், 14 ஆயத்துகளைக் கொண்ட மதனி சூரா.

வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் அல்லாஹ்வுக்குப் பொருத்தமற்றவற்றை விட்டும் அவனைத் தூய்மைப்படுத்துகின்றன. அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன் படைப்பிலும், நிர்ணயத்திலும், சட்டத்திலும் அவன் ஞானம் மிக்கவன்.