சூரா அல்-ஃபுர்கான், திருக்குர்ஆனின் 25வது அத்தியாயம், 77 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.
சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவிக்கக்கூடிய குர்ஆனை தம் அடியாரும் தூதருமாகிய முஹம்மதின் மீது இறக்கியவன் மிகவும் நலவுகள் நிறைந்தவன், கண்ணியம் மிக்கவன். அது அவர் மனித, ஜின் இனத்திற்கு தூதராகவும் அல்லாஹ்வின் வேதனையைக்குறித்து எச்சரிக்கை செய்பவராகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.