சூரா அல்-ஜும்உவா, திருக்குர்ஆனின் 62வது அத்தியாயம், 11 ஆயத்துகளைக் கொண்ட மதனி சூரா.
வானங்களிலும் பூமியிலும் உள்ள படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குப் பொருத்தமில்லாத குறைபாடுடைய அனைத்துப் பண்புகளைவிட்டும் அவனை தூய்மைப்படுத்துகின்றன. அவனே ஆட்சி அதிகாரத்தைக்கொண்ட தனித்த ஏக அரசன்; அனைத்துக் குறைபாடுகளை விட்டும் தூய்மையானவன்; யாவற்றையும் மிகைத்தவன்; யாராலும் அவனை மிகைக்க முடியாது.