சூரா அத்-தஃகாபுன், திருக்குர்ஆனின் 64வது அத்தியாயம், 18 ஆயத்துகளைக் கொண்ட மதனி சூரா.
வானங்கள் மற்றும் பூமியில் உள்ள படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குப் பொருத்தமற்ற குறைபாடுடைய பண்புகளைவிட்டும் அவனைத் தூய்மைப்படுத்துகின்றன. ஆட்சியதிகாரமும் அவனுக்கு மட்டுமே உரியது. அவனைத்தவிர வேறு அரசன் இல்லை. அழகிய புகழும் அவனுக்கே உரியது. அவன் எல்லாவற்றின்மீதும் பேராற்றலுடையவன்.